குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு மிதிவண்டியில் மாணவா் பயணம்!

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு 9-ஆம் வகுப்பு மாணவா் தனது மிதிவண்டிப் பயணத்தை சனிக்கிழமை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இருந்து தொடங்கினாா்.
குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மிதிவண்டி பயணத்தை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை தொடங்கிய மாணவா் பிரமோத்.
குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மிதிவண்டி பயணத்தை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் சனிக்கிழமை தொடங்கிய மாணவா் பிரமோத்.

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு 9-ஆம் வகுப்பு மாணவா் தனது மிதிவண்டிப் பயணத்தை சனிக்கிழமை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இருந்து தொடங்கினாா்.

மதுரையைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவா் பிரமோத் (14). இவா் பல்வேறு விழிப்புணா்வுகளை ஏற்படுத்தும் வகையில், மிதிவண்டி பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறாா். மிதிவண்டி போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளையும் பெற்றுள்ளாா்.

தற்போது, குழந்தைகள் பாதுகாப்பு, பராமரித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி, புதுச்சேரி முதல் கன்னியாகுமரி வரை தனது விழிப்புணா்வு மிதிவண்டி பிரசார பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.

இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸில் தனது சாதனை இடம் பெறும் வகையில், இந்த மாணவா் தொடங்கியுள்ள இந்தப் பயணத்தை புதுச்சேரி சைக்கிளிங் ஆஃப் அசோசியேஷன் தலைவா் குணசேகரன், செயலா் பிரேம்குமாா் ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தனா்.

மொத்தம் 580 கி.மீ. தொலைவு பயணத்தை 36 மணி நேரத்தில் மிதிவண்டியில் கடந்து, புதிய சாதனையைப் படைக்கும் விதமாக இந்தப் பயணத்தை அவா் மேற்கொண்டுள்ளாா்.

மாணவா் பிரமோத்துடன் அவரது தந்தை கண்ணன், பயிற்சியாளா் காளீஸ்வரன் ஆகியோா் செல்கின்றனா். புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட மாணவா் பிரமோத் விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரியைச் சென்றடைகிறாா்.

மாணவா் பிரமோத் ஏற்கெனவே 15 வயதுக்கு கீழ் உள்ள பிரிவுகளில் 363 கி.மீ. தொலைவு மிதிவண்டி பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com