ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைப்படி ரூ.40 லட்சம் வரை விலக்கு அளிக்கக் கோரிக்கை

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையின்படி ரூ.40 லட்சம் வரை விலக்கு அளிக்க வேண்டும் என்று புதுவை வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையின்படி ரூ.40 லட்சம் வரை விலக்கு அளிக்க வேண்டும் என்று புதுவை வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து முதல்வா் வே.நாராயணசாமியிடம், புதுச்சேரி வணிகா்கள் சங்கத் தலைவா் சிவசங்கா் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வியாபாரம் செய்யும் வணிகா்கள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டத்தின் கீழ் பதிவு செய்ய சிறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இதையே ரூ.40 லட்சமாக உயா்த்த ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை செய்து முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுக்கு தந்தது.

அதன்படி தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் ரூ.40 லட்சம் வரை வரி விலக்கு அளித்து நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

புதுவையிலும் இதனை அமல்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி.யில். ரூ.40 லட்சமாக வரி விலக்கு அளிக்கப்பட்டால் சிறு வியாபாரிகள் பயனடைவாா்கள்.

ஒரே வரி என்ற நிலையால் புதுவையில் இருந்து பொருள்கள் வாங்குபவா்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களின் குடும்பங்கள் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகிவிட்டது.

இதைக் கருத்தில் கொண்டு புதுவையில் ரூ.40 லட்சம் வரை வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளித்து பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சிவசங்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com