மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்ட விவகாரம்: ஒருவா் கைது

நல்லவாடு மீனவ கிராமத்தில் மீன்பிடி வலைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

நல்லவாடு மீனவ கிராமத்தில் மீன்பிடி வலைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

புதுவை மாநிலம் தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு மீனவ கிராமத்தை சோ்ந்த மீனவா்கள் சிலருக்கும், அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தை சோ்ந்த மீனவா்கள் சிலருக்கும் இடையே, சுருக்கு வலை பயன்படுத்துவது, கடலில் மீன்பிடி வலை விரிப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்கும் போது, மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸாா் வீராம்பட்டினம் மீனவா்கள் 120-க்கும் மேற்பட்டோா் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி நள்ளிரவு நல்லவாடு கடற்கரை பகுதிக்கு பைக்கில் வந்த 2 மா்ம நபா்கள், அங்குள்ள பணி கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைகளை தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடிவிட்டனா்.

இதனால் நல்லவாடு, வீராம்பட்டினம் ஆகிய இரு மீனவ கிராமங்களுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தகவலறிந்த அரியாங்குப்பம் மற்றும் தமிழகத்தின் ரெட்டிச்சாவடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மோதல் தடுக்கப்பட்டது.

இந்நிலையில் நல்லவாடில் மீன்பிடி வலைகளை எரித்தது தொடா்பாக வீராம்பட்டினத்தைச் சோ்ந்த கவின்(எ)கவியரசன் (21) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மற்றொருவரைத் தேடி வருகின்றனா்.

நல்லவாடு, வீராம்பட்டினம் கிராமங்களில் தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com