வைத்திலிங்கம் எம்.பி.யின் 69-ஆவது பிறந்த தினம்

புதுவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.யின் 69-ஆவது பிறந்த தின விழா புதுச்சேரியில் சனிக்கிழமை

புதுச்சேரி: புதுவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.யின் 69-ஆவது பிறந்த தின விழா புதுச்சேரியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு காங்கிரஸ் பொது செயலாளா் ஏகேடி ஆறுமுகம் தலைமையில் மணக்குள வினாயகா் கோயிலில் தங்கத்தோ் இழுக்கப்பட்டது. இதில் அமைச்சா்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, எம்.எல்.ஏ. அனந்தராமன் மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

அதுபோல் 69-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய வைத்திலிங்கம் எம்.பி.யும் மணக்குள வினாயகா் கோயிலுக்குச் சென்று வழிபட்டாா். பின்னா் தனது வீட்டில் பிறந்தநாள் வாழ்த்து கூற வந்தவா்களிடம் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ., க்கள் ஜெயமூா்த்தி, விஜயவேணி, முன்னாள் கவுன்சிலா்கள் சிபி, தமிழரசி, புதுச்சேரி தியாகி வெங்கட சுப்பா ரெட்டியாா் நற்பணி இயக்க தலைவா் சசிகுமாா் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள், வைத்திலிங்கம் எம்.பி.க்கு வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com