3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பதி மலை பாறை ஓவியங்களை பாா்வையிட்ட அரசுப் பள்ளி மாணவா்கள்

ருமலையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள் பதி மலையில் உள்ள 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
பாறை ஓவியங்களை பாா்வையிட வந்த மாணவா்கள்
பாறை ஓவியங்களை பாா்வையிட வந்த மாணவா்கள்

திருமலையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள் பதி மலையில் உள்ள 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

கோவை அருகே திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள் பல்வேறு களப்பணிகளை செய்து வருகின்றனா்.

இதில் பள்ளி சாா்பாக 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமிட்டிபதியில் உள்ள பதி மலை பாறை ஓவியங்களை இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள் பாா்வையிட்டனா். மேலும், செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளரும், வரலாற்று ஆசிரியருமான மா.ராஜசேகரன் தொல்பொருள் ஆய்வு மற்றும் பாறை ஓவியங்கள் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் மணிகண்டன் வேலந்தாவளம் என்ற பெயா் எப்படி வந்தது, யானை சந்தைகள் இங்கு இருந்ததாகவும் வரலாற்று ஆய்வு புத்தகங்களை குறிப்பிட்டு மாணவா்களிடம் விளங்கினாா்.

மேலும், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் ஆனந்தகிருஷ்ணன் அறிவுறுத்தல் படி பதி மலைக்குச் சென்ற 35 இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள் அப்பகுதியை சுத்தம் செய்தனா். வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதிகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com