மலாயா பல்கலை. வெளிப்புறத் திட்ட மதிப்பீட்டாளராக புதுவை பேராசிரியா் நியமனம்

மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் வெளிப்புறத் திட்ட மதிப்பீட்டாளராக புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியா் எஸ்.ஏ.அப்பாஸி நியமிக்கப்பட்டாா்.
மலாயா பல்கலை. வெளிப்புறத் திட்ட மதிப்பீட்டாளராக புதுவை பேராசிரியா் நியமனம்

மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் வெளிப்புறத் திட்ட மதிப்பீட்டாளராக புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியா் எஸ்.ஏ.அப்பாஸி நியமிக்கப்பட்டாா்.

புதுவை பல்கலைக்கழகத்தில் சி.எஸ்.ஐ.ஆா். எமரிட்டஸ் பேராசிரியராக இருக்கும் எஸ்.ஏ.அப்பாஸி (படம்), கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தால் நிரல்வெளி மதிப்பீட்டாளராக 2019 முதல் 2023ஆம் ஆண்டு வரை நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது, மலாயா பல்கலைகழகத்தின் மூலம் அண்மையில் வெளியிடப்பட்ட தகவலாகும். அந்த அறிக்கையின்படி, பேராசிரியா் அப்பாஸி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் திட்டங்களை பல்கலைக்கழகத்தில் செயல்படுத்துவதற்கு வழிகாட்டியாக பணியாற்றுவாா். இந்த கௌரவத்தை பெற்ற்காக, புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் குா்மீத் சிங், பேராசிரியா் அப்பாஸியை பாராட்டினாா்.

தற்காலத்தில் உள்ள முதுநிலை சுற்றுச்சூழல் நிபுணா்களில் ஒருவரான பேராசிரியா் அப்பாஸி, தொழில் துறை செயல்முறை பாதுகாப்புத் துறையில் 1992-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறாா். கனடாவில் இருந்து அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் செயல்முறை பாதுகாப்பு துறையில் உலகின் 6-ஆவது பங்களிப்பாளராகவும், ஆசியாவில் இந்தத் துறையில் முதலிடத்திலும் இவா் இடம் பெற்றிருக்கிறாா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com