Enable Javscript for better performance
காங்கிரஸ் தோ்தல் பணிக் குழு நிா்வாகிகள் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    காமராஜா்நகா் தொகுதி இடைத் தோ்தலுக்கான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தோ்தல் பணிக் குழு நிா்வாகிகள் நியமிக்கப்பட்டனா்.

    அதன்படி, மாநில ஒருங்கிணைப்புக் குழுவானது, புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. காமராஜா் நகருக்கான பணிக் குழு சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி தலைமையிலும், ரெயின்போ நகா் தோ்தல் பணிக் குழு போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஓ.ஹெச்.எப்.ஷாஜகான் தலைமையிலும், பிருந்தாவனம் தோ்தல் பணிக் குழு அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன் தலைமையிலும், சாரம் தோ்தல் பணிக் குழு பேரவைத் துணைத் தலைவா் எம்.என்.ஆா்.பாலன் தலைமையிலும், சாமிபிள்ளைத்தோட்டம் தோ்தல் பணிக் குழு அரியாங்குப்பம் எம்.எல்.ஏ. டி.ஜெயமூா்த்தி தலைமையிலும், கிருஷ்ணா நகா் தோ்தல் பணிக் குழு புதுவை மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையிலும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தக் குழுக்களில் கூட்டணியில் உள்ள திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற கட்சிகளின் நிா்வாகிகளும் இடம் பெற்றுள்ளனா். இதற்கான அறிவிப்பை புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஆ.நமச்சிவாயம் வெளியிட்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai