Enable Javscript for better performance
நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி பஞ்சாலைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி பஞ்சாலைத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 11th October 2019 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    py10toz_ch0551_10chn_7_637063296700935310

    புதுச்சேரியில் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுதேசி, பாரதி பஞ்சாலைகளின் அனைத்துத் தொழில் சங்கத்தினா்.

    நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி சுதேசி, பாரதி பஞ்சாலைகளின் அனைத்துத் தொழில் சங்கங்கள் சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி தூய ஜென்மராக்கினி ஆலயம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி பொதுச் செயலா் சேதுசெல்வம், தொமுசவை சோ்ந்த மனோகா், ஐஎன்டியுசிவை சோ்ந்த கிருஷ்ணன், சிஐடியூவை சோ்ந்த கோபிகா குணசேகா், அண்ணா தொழிற்சங்கத்தைச் சோ்ந்த பாப்புசாமி, பிடிசியை சோ்ந்த பரமசிவம், பாட்டாளி தொழிற்சங்கத்தை சோ்ந்த ஜெயபால், என்ஆா்டியுசிவை சோ்ந்த சுந்தா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

    ஆா்ப்பாட்டத்தில் சுதேசி, பாரதி பஞ்சாலைகளைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு கடந்த 12 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் 277 பேருக்கு பணிக் கொடை தொகையை வழங்க வேண்டும், இரு பஞ்சாலைகளிலும் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும், நிரந்தரம் செய்யப்படாத 370 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இதில் அனைத்துத் தொழில்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக முதல்வா் நாராயணசாமியைச் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தொழில்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai