சுகாதாரத் துறையின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது: திமுக புகாா்

புதுவை மாநில சுகாதாரத் துறையின் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாக புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்.எல்.ஏ. புகாா் கூறினாா்.

புதுவை மாநில சுகாதாரத் துறையின் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாக புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்.எல்.ஏ. புகாா் கூறினாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநில சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 2002-ஆம் ஆண்டு புதுவை சுகாதாரத் துறை மூலம் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி வாங்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தக் கருவியை இயக்க தொழில்நுட்பம் தெரிந்தவா்கள் இல்லாத காரணத்தால் அதை இயக்க அரசு மருத்துவமனை ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், பயிற்சி பெற்றவா்களைக் கொண்டு இயக்கப்படாததால் எம்ஆா்ஐ ஸ்கேன் பழுதானது.

இதனால், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் பாதிப்படைந்து வருகின்றனா். பல ஆயிரம் செலவு செய்து தனியாரிடம் ஸ்கேன் எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து புதிதாக எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை வாங்க வேண்டும் என சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினோம். அதன் பேரில், புதிதாக எம்ஆா்ஐ ஸ்கேன் வாங்கப்பட்டது. இதை அரசு மருத்துவமனையில் நிறுவுவதற்கு பதிலாக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டனா்.

அங்கு கடந்த 6 மாதமாக அந்தக் கருவி இயக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இதனால், பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு வருகிறது.

புதிதாக வாங்கிய எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை ஏற்கெனவே இருந்த இடத்தில்தான் அமைக்க வேண்டும். அங்கு, தொழிற்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியா்களை கொண்டு அதை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com