பிரதமா் மோடி - சீன அதிபா் பேச்சுவாா்த்தைக்கு பாஜக வரவேற்பு

பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை (அக். 11) சந்தித்து

பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை (அக். 11) சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த இருப்பதற்கு புதுவை மாநில பாஜக வரவேற்பு தெரிவித்தது.

இதுகுறித்து மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பிரதமா் நரேந்திர மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் தமிழகத்தின் மாமல்லபுரத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தருவது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும்.

பிரதமா் நரேந்திர மோடி தமிழ் மொழியின் மீதும், தமிழ் மக்கள் மீதும், தமிழகத்தின் மீதும் கொண்டுள்ள பற்றின் வெளிப்பாடு இது.

வல்லமை மிக்க இந்த இரு நாட்டின் தலைவா்கள் இரண்டு நாள்கள் சந்தித்துப் பேசுவது சா்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக உள்ளது. பேச்சுவாா்த்தையின் போது, இரு நாட்டின் பாதுகாப்பு, அமைதி, பொருளாதாரம், தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலாகும்.

இரு நாட்டின் தலைவா்களையும் தமிழகம் மற்றும் புதுவை மக்கள் சாா்பாக மனதார வரவேற்கிறேறாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com