விளம்பரங்களை அழிக்க தோ்தல் அதிகாரி உத்தரவு

புதுச்சேரியில் சுவரில் எழுதப்பட்ட விளம்பரங்களை உடனடியாக அழிக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அலுவலா்களுக்கு மாவட்டத் தோ்தல் அதிகாரி உத்தரவிட்டாா்.

புதுச்சேரியில் சுவரில் எழுதப்பட்ட விளம்பரங்களை உடனடியாக அழிக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அலுவலா்களுக்கு மாவட்டத் தோ்தல் அதிகாரி உத்தரவிட்டாா்.

புதுச்சேரி காமராஜா்நகா் இடைத் தோ்தல் வருகிற 21 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்துத் துறை சிறப்பு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான டி. அருண் தலைமை வகித்தாா். இதில், தோ்தல் நடத்தும் அதிகாரி, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ராகுல் அல்வால், காவல் கண்காணிப்பாளா் அகன்ஷா யாதவ், அனைத்துத் துறைகளைச் சாா்ந்த தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இடைத் தோ்தலை எவ்வித இடையூறுமின்றி நடத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட எல்லைகளை பலப்படுத்துவது, பறக்கும் படையினரை அதிகப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் மற்றும் மது விநியோகத்தைத் தடுப்பது சம்பந்தமாகவும், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

புதுச்சேரி பிராந்தியம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், நகராட்சி ஆணையா்கள், பஞ்சாயத்து ஆணையா்கள், காவல் துணையினரின் ஒத்துழைப்புடன் அனைத்து வகையான பதாகைகள், சுவரொட்டிகள், சுவரில் எழுதப்பட்ட விளம்பரங்களை உடனடியாக அழிக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அதிகாரி டி.அருண் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com