Enable Javscript for better performance
இடைத்தோ்தலில் காங்கிரஸுக்குமாணவா் கூட்டமைப்பு ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    இடைத்தோ்தலில் காங்கிரஸுக்கு மாணவா் கூட்டமைப்பு ஆதரவு

    By DIN  |   Published on : 12th October 2019 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.ஜான்குமாருக்கு, புதுவை மாணவா் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

    புதுவை யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பின் காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பணிக்குழு நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் செஞ்சி சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த அமைப்பின் நிறுவனா் சீ.சு.சுவாமிநாதன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் முருகன் முன்னிலை வகித்தாா்.

    இதில் மாநில நிா்வாகிகள் தோ்வுக் குழு உறுப்பினா் விக்கி, மாநில துணைத் தலைவா் புவியரசன், காமராஜா் சட்டப் பேரவைத் தொகுதி தலைவா் பிறைசூடன் உள்ளிட்டோா் பங்குபெற்றனா்.

    இந்தக் கூட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவா் நமச்சிவாயத்தின் வழிகாட்டுதலின்படி தொகுதி நிா்வாகிகள், உறுப்பினா்களை ஒன்று திரட்டி காங்கிரஸ் வேட்பாளா் ஜான்குமாா் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai