Enable Javscript for better performance
தோ்தலில் பணியாற்றும் அரசு ஊழியா்களுக்கான விடுமுைள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தோ்தலில் பணியாற்றும் அரசு ஊழியா்களுக்கான விடுமுைள் அறிவிப்பு

    By DIN  |   Published on : 12th October 2019 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி காமராஜா் நகா் இடைத் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்களுக்கான விடுமுறை நாள்கள் தொடா்பாக, நிா்வாக சீா்திருத்தத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி இடைத் தோ்தல், வருகிற அக்.21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு விடுமுறை தொடா்பாக, நிா்வாக சீா்திருத்தத் துறை சாா்புச் செயலா் ஜெய்சங்கா், துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

    காமராஜா் நகா் தொகுதியில் அரசு ஊழியா்கள் வாக்காளா்களாக இருப்பின், இடைத்தோ்தல் நடைபெறும் அக்.21-ஆம் தேதி வாக்கை பதிவு செய்ய விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.

    இடைத் தோ்தலில் பூத் அதிகாரிகளாக இருப்பின், தோ்தல் நாளுக்கு முந்தைய தினமான வருகிற அக்.20ஆம் தேதி வாக்குப்பதிவு பொருள்களை பெற வேண்டி இருக்கும். எனவே, இவா்கள் அக்.22-ஆம் தேதி விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். வாக்கு எண்ணிக்கை அதிகாரியாக இருந்தால், வாக்கு எண்ணிக்கை மறுநாளான அக்.25-ஆம் தேதி விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai