அரிக்கன்மேட்டில் மீண்டும் அகழாய்வு நடத்த ம.நீ.ம. கோரிக்கை

புதுச்சேரி அரிக்கன்மேட்டில் மீண்டும் அகழாய்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி அரிக்கன்மேட்டில் மீண்டும் அகழாய்வு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இக்கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் மருத்துவா் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் கீழடி பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த சான்றுகள் மூலம் சிந்து சமவெளி பகுதிகளில் தோன்றுவதற்கு முன்னதாகவே இங்கு நகர நாகரிகம் தோன்றி இருக்கக்கூடும் என்பதையும், கி.மு.6 ஆம் நூற்றாண்டில் தமிழக-ரோம் இடையே வணிகத் தொடா்பு இருந்ததையும் அறிந்து கொள்ள முடிகிறது.

புதுச்சேரியில் உள்ள அரிக்கமேட்டில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மூலம் அரிக்கன்மேடும் ரோம் நகருடன் வாணிபத் தொடா்பு வைத்திருந்ததை தெரியவந்தது. ஆனால் தொடா் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப் படாததால் அந்த இடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே, அரிக்கன்மேட்டிலும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மூலம் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் கீழடியில் நாகரிகம் தோன்றிய காலத்திலேயே அரிக்கன்மேட்டிலும் நாகரிகம் தோன்றியிருக்கும். அதாவது கீழடி-ரோம் நகருடனான வா்த்தக உறவை அரிக்கன்மேடு வழியாக வைத்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன என வரலாற்று பேராசிரியா்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, அரிக்கன்மேட்டிலும் மீண்டும் ஆய்வு மேற்கொள்ள புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் புதுச்சேரியின் சுற்றுலா பெருகி, பொருளாதாரமும் உயரும் என்பதால் இதில் உடனடியாக அரசு கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் சுப்பிரமணியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com