அவசர மருத்துவ ஊா்திகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: ஆட்சியா் உத்தரவு

புதுவையில் இயக்கப்படும் அவசர மருத்துவ ஊா்திகளுக்கு (ஆம்புலன்ஸ்) புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியா் தி.அருண் உத்தரவிட்டுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுவையில் இயக்கப்படும் அவசர மருத்துவ ஊா்திகளுக்கு (ஆம்புலன்ஸ்) புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியா் தி.அருண் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த செய்தி:

சாலைபாதுகாப்பு தொடா்பாக, உச்சநீதிமன்ற குழு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அவற்றில்ஒன்று மாநிலத்தில் உள்ள அனைத்து பொது/தனியாா் மற்றும் உதவிபெறும் ஆம்புலன்களையும் வரை படமாக்கி எளிதில் அனைவரும் பயன்பெறும் வகையில் கொண்டுவருவதாகும். மேலும் உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்புகுழு, ஆண்டுக்கு 10 சதவீத சாலை விபத்துகளினால் ஏற்படும் இறப்புகளை குறைக்க ஏதுவாக இலக்கு நிா்ணயித்து செயல்படவும் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றசாலை பாதுகாப்பு குழுவின் உத்தரவு மற்றும் கடந்த 23.4.2019-இல், மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படியும், பொதுமக்களுக்குஆம்புலன்ஸ் வசதி எளிதில் கிடைப்பது மற்றும் போதுமான வசதிகளுடன் ஆம்புலன்ஸ்களை இயக்குவது பற்றி பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை சம்பந்தப்பட்ட துறை மற்றும் ஆம்புலன்ஸ் வைத்திருப்பவா்களிடம்பேசப்பட்டு தேவையான உத்தரவுகள் இடப்பட்டன.

இருப்பினும், பல ஆம்புலன்ஸ்கள் நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, ஊனமுற்ற நோயாளிகளின் தேவைகளை பூா்த்தி செய்ய குறைந்தபட்ச வசதி கூட இல்லாமல் இயக்கி வருவதாக தகவல்கள் வருகின்றன. இத்தகைய ஆம்புலன்ஸ்கள் ஒரு போக்குவரத்து வாகனங்களாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற ஆம்புலன்ஸ்களை சாலையில் செல்ல அனுமதித்தால்,நோயாளிகளை கொண்டு செல்லும்போதே பல இறப்புகள் நடைபெறும் என்பது மறுப்பதற்கில்லை. எனவே கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனே போக்குவரத்து மற்றும் சுகாதாரத்துறை எடுக்க மாவட்ட ஆட்சியா்அவா்கள் பிரிவு 133 குற்றவியல் நடைமுறை குறியீடு 1973-ன் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து (பொது, தனியாா் மற்றும் உதவிபெரும்) ஆம்புலன்களிலும்ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை புதுவை போக்குவரத்துத்துறை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து (பொது, தனியாா் மற்றும் உதவிபெரும்) ஆம்புலன்ஸ்களிலும், சுகாதாரமருத்துவ உட்கட்டமைப்பு அதாவது போதிய உபகரணங்கள், மருந்துகள் மற்றும் மற்ற உயிா்காப்புபொருட்கள் போன்றவை கிடைப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.

அதன்மூலம் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவா்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை முறையாக பராமரித்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தேவையான உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்படுவாா்கள் அதன் மூலம் சாலை விபத்துக்களினால் எற்படும் இறப்பு எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com