சுதேசி, பாரதி பஞ்சாலைகளை இயக்க வேண்டும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

சுதேசி, பாரதி பஞ்சாலைகளை இயக்க வேண்டும் என அனைத்துத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

சுதேசி, பாரதி பஞ்சாலைகளை இயக்க வேண்டும் என அனைத்துத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

சுதேசி பஞ்சாலையின் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.

ஏஐடியூசி வி.எஸ். அபிஷேகம், சிஐடியூ கோபிகா, அண்ணா தொழிலாளா் சங்கம் ஏ. பாப்புசாமி, பாட்டாளி தொழிற்சங்கம் கதிரவன், என்ஆா்டியூசி சுந்தா், எல்பிஎப் தேவ. பழனிசாமி, ஐஎன்டியூசி டி. கிருஷ்ணன் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

சுதேசி, பாரதி பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு 12 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும், இரு ஆலைகளிலும் பணியாற்றி 2013 ஆம் ஆண்டு முதல் ஓய்வுபெற்றுள்ள தொழிலாளா்கள் 277 பேருக்கு வழங்கப்படாத பணிக்கொடை தொகையை வழங்க வேண்டும். 2013 ஆம் ஆண்டு முதல் பிஎஃப் நிறுவனத்துக்கு செலுத்தப்படாத தொகையை வழங்க வேண்டும்.

தொழிற்சாலை நிலையாணைச் சட்டத்தை கறாராக அமலாக்க வேண்டும், அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயன் தலைமையிலான ஒரு நபா் குழு ஆலைகளை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளித்த காலகட்டத்தில் இரு பஞ்சாலைகளிலும் பணியாற்றிய நிரந்தரம் செய்யப்படாத 370 தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலையும், முழு சம்பளமும் வழங்க வேண்டும்.

சுதேசி, பாரதி பஞ்சாலைகளை மீண்டும் இயக்கி, உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com