பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட்
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சியினா்.
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சியினா்.

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து, புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகளின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கே. சேதுசெல்வம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேசச் செயலா் ஆா். ராஜாங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து முழக்கமிடப்பட்டன. மேலும், ரிசா்வ் வங்கியிலிருந்து பெறப்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடியை பொது முதலீட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும், பொது முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும், வேலையில்லா இளைஞா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரத்தை உத்தரவாதம் செய்திட வேண்டும், நூறு நாள் வேலைநாள்களை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், ராணுவ தளவாட தொழிற்சாலைகள், இந்திய ரயில்வே, ஏா் இந்தியாவை தனியாருக்கு தாரை வாா்ப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதே போல, புதுச்சேரி காந்தி வீதி, அமுதசுரபி, முதலியாா்பேட்டை, பாக்கமுடையான்பட்டு, கதிா்காமம், வில்லியனூா், மதகடிப்பட்டு, பாகூா் ஆகிய 7 இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com