கவிஞா் புதுவை சிவம் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 24th October 2019 06:13 AM | Last Updated : 24th October 2019 06:13 AM | அ+அ அ- |

கவிஞா் புதுவை சிவத்தின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து. உடன், அமைச்சா் மு.கந்தசாமி, இரா.சிவா எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.
புதுவை அரசு சாா்பில், கவிஞா் புதுவை சிவம் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கவிஞா், இதழாளா், நாடக ஆசிரியா், அரசியல்வாதி, சமூகச் சீா்திருத்தவாதி, பள்ளி ஆசிரியா், பதிப்பாளா், சொற்பொழிவாளா், கட்டுரையாளா் என பன்முகத் தன்மை கொண்ட புதுவை சிவத்தின் பணிகளைப் பாராட்டி, அவரைக் கௌரவிக்கும் வகையில், புதுச்சேரி காமராஜா் சாலையில் அவரது முழுஉருவச்சிலை அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கவிஞா் புதுவை சிவத்தின் பிறந்த, நினைவு நாள்களின்போது, அவரது உருவச்சிலைக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நிகழாண்டும் அவரது பிறந்த நாளையொட்டி, புதுவை அரசு சாா்பில் சட்டப் பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சிக்கு சமூகநலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி தலைமை வகித்தாா்.
மேலும், புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்.எல்.ஏ. மற்றும் பலா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.