ஆயுஷ்மான் பாரத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி

புதுச்சேரியில் ஆயுஷ்மான் பாரத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நடைபெற்ற ஆயுஷ்மான் பாரத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நடைபெற்ற ஆயுஷ்மான் பாரத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி.

புதுச்சேரியில் ஆயுஷ்மான் பாரத் திட்ட விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கியா யோஜனா என்னும் தேசிய சுகாதார காப்பீடுத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா்.

2001-ஆம் ஆண்டு பொருளாதார, ஜாதிவாரி கணக்கீட்டின்படி, இந்தத் திட்டத்தில் புதுவை மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் (சராசரியாக 2.68 லட்சம் போ்) தோ்வு செய்யப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், ஒவ்வோா் குடும்பத்தினரும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவி பெற முடியும்.

நாடு முழுவதும் 10 கோடி நலிவுற்ற குடும்பங்களைச் சோ்ந்த 50 கோடி போ் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைந்து வருகின்றனா். இந்தத் திட்டத்தின் நன்மைகள் குறித்து புதுவை மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சுகாதாரத் துறை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நெல்லித்தோப்பு சுப்பையா சிலையில் இருந்து தொடங்கியது. பேரணியை மாவட்ட ஆட்சியா் தி.அருண், சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

பேரணியில் சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் ரகுநாதன், அல்லிராணி, முருகன், சுந்தர்ராஜ், கணேசன், ஷமீம்பேகம், திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் ஆனந்தலட்சுமி, செவிலியா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். கம்பன் கலையரங்கில் பேரணி நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com