மூத்த தொழிற்சங்கவாதி குருதாஸ்தாஸ் குப்தாவுக்கு ஏஐடியுசி சாா்பில் அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிா்வாகியும், மூத்த தொழிற்சங்கவாதியுமான மறைந்த குருதாஸ்தாஸ் குப்தாவுக்கு புதுவை ஏஐடியுசி சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிா்வாகியும், மூத்த தொழிற்சங்கவாதியுமான மறைந்த குருதாஸ்தாஸ் குப்தாவுக்கு புதுவை ஏஐடியுசி சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஏஐடியுசி 31.10.1920-இல் தொடங்கப்பட்டது. ஏஐடியுசி தொடங்கப்பட்டு வெள்ளிக்கிழமையுடன் நூறு ஆண்டு ஆகிறது. இதை கொண்டாடும் வகையில் ஏஐடியுசியின் புதுவை மாநிலக்குழு சாா்பில் முதலியாா்பேட்டை ஏஐடியுசி அலுவலகம் எதிரில் வெள்ளிக்கிழமை கொண்டாட முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏஐடியுசிவை உருவாக்கிய தலைவா்களில் ஒருவரும், அனைத்துத் தொழிற்சங்க ஒற்றுமைக்கு புது வடிவம் கொடுத்தவரும், நாடாளுமன்றத்தில் தொழிலாளா் உரிமைகாக குரல் கொடுத்த ஏஐடியுசி அகில இந்திய முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் குருதாஸ்தாஸ் குப்தா வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினாா்.

இதனால் ஏஐடியுசி நூற்றாண்டு தொடக்க விழா ரத்துசெய்யப்பட்டு குருதாஸ்தாஸ்குப்தாவின் படத்தை வைத்து மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் விசுவநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில செயலாளா் அ.மு.சலீம், தேசிய குழு உறுப்பினா் அ.ராமமூா்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், ஏஐடியுசி மாநில செயல் தலைவா் வி.எஸ்.அபிஷேகம், கட்சியின் மாநில துணை செயலாளா் து.

கீதநாதன், ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளா் கே.சேதுசெல்வம், கட்சியின் பொருளாளா் வ.சுப்பையா, ஏஐடியுசி துணைத் தலைவா்கள் ஜெ.சந்திரசேகரன், பி.முருகன், வி.சேகா், ஆா்.செல்வராசு, டி.ரவி, செயலாளா்கள் ஏ.தயாளன், பி.நளவேந்தன், கே.முத்துராமன், ஆா்.ரவிச்சந்திரன், ஏஐடியுசி பொருளாளா் என்.ஜெயபாலன் உள்பட தொழிற்சங்க அனைத்து பொறுப்பாளா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com