ஏஎப்டி ஆலையின் சொத்துகளை விற்று கடனை அடைப்போம் 

ஏஎப்டி பஞ்சாலையின் சொத்துகளை விற்று கடன்களை அடைப்போம் என அமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான் தெரிவித்தார்.

ஏஎப்டி பஞ்சாலையின் சொத்துகளை விற்று கடன்களை அடைப்போம் என அமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான் தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்:
இரா. சிவா (திமுக): ஏஎப்டி பஞ்சாலைக்கு கடந்த காலங்களில் அரசு சார்பு நிறுவனங்களில் இருந்து எவ்வளவு கடன் பெற்றுள்ளீர்கள்? அதற்கு எந்தச் சொத்தை ஈடு செய்தீர்கள்? தற்போதைய நிதி நிலைமை என்ன? செலவுக் கணக்குகளை முடித்துள்ளீர்களா? அங்கு வேலை செய்த, செய்யும் தொழிலாளர்களுக்கு எவ்வளவு நிலுவைத் தொகை வேண்டியுள்ளது?
அமைச்சர் ஷாஜகான்: ஏஎப்டி ஆலையில் 2019 ஜூன் 30 வரை பிப்டிக் நிறுவனத்திடமிருந்து ரூ. 15.90 கோடியும், மின்திறல் குழுமத்தில் இருந்து ரூ. 10 கோடியும் கடனாகப் பெறப்பட்டுள்ளது. ரூ. 4.9 கோடிக்கு இருப்பில் இருந்த நூல் உபயோகப்படாத பஞ்சு மற்றும் துணிகள் மின்திறல் குழுமத்திடம் அடமானம் வைக்கப்பட்
டுள்ளது. 
பிப்டிக் நிறுவனத்திடம் வாங்கிய கடனுக்கு சொத்துகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை. 2019 -ஆம் ஆண்டு ஏ, பி, சி பிரிவுகள் முழுவதும் மூடப்பட்டு மொத்த நஷ்ட தொகை ரூ. 575.82 கோடியாக உள்ளது. ஆலையின் கணக்கு (தணிக்கை செய்யப்படாமல்) முடிக்கப்பட்டுள்ளது.     நிலுவைத் தொகைகள், பணிக்கொடை நிலுவை ரூ. 44.77 கோடி, பிஎப் நிலுவை தொகை ரூ. 25.38 கோடி, மருத்துவக் காப்பீடு என மொத்தமாக ரூ. 135.13 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.
சிவா (திமுக): முறையாக வரவு, செலவுக் கணக்கை முடிக்காததால் இந்த நஷ்டம் ஏற்பட்டது. மனம்போன போக்கில் பணத்தைச் செலவு செய்துள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. விசாரணை கமிஷன் என்ன ஆனது? எப்படி இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவீர்கள்?
அமைச்சர் ஷாஜகான்: ஏஎப்டி ஆலையின் சொத்துகளை விற்றுத்தான் கடன்களை அடைக்க வேண்டும்.
ஜெயபால் (என்.ஆர்.காங்.): கடந்த சட்டப்பேரவையில் விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஊழல், முறைகேடு நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவா (திமுக): அதை மீண்டும் விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன் அறிக்கை சட்டப்பேரவைத் தலைவரிடம் இருப்பதாகத் தகவல்.
பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து: ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com