சுடச்சுட

  

  பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுவை அரசு விருது

  By DIN  |   Published on : 11th September 2019 11:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Pariyerum_Perumal4

  புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வாகியுள்ளது.
  புதுவை அரசின் செய்தி விளம்பரத் துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில், இந்திய திரைப்பட விழாவும், 2018-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி முருகா திரையரங்கில் வரும் 13-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு இந்த விழா நடைபெறுகிறது.
  இந்தியாவிலேயே புதுவையில் மட்டும்தான் 36 ஆண்டுகளாக தொடர்ந்து சிறந்த திரைப்படங்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து திரைப்பட விழாவை நடத்துகிறது. புதுவை அரசு அந்தத் திரைப்படங்களில் சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.
  அந்த வகையில், வரும் 13-ஆம் தேதி மாலை முருகா திரையரங்கில் நடைபெறும் விழாவில், 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு வழங்கப்பட உள்ளது.
  இந்த விருதை அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு முதல்வர் வே.நாராயணசாமி வழங்குகிறார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரூ. ஒரு லட்சம் ரொக்கப்பரிசும் விழாவில் வழங்கப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் இந்தத் திரைப்படத்தையும் இலவசமாக பார்வையிடலாம் என்று செய்தி விளம்பரத் துறை தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai