Enable Javscript for better performance
கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

    By DIN  |   Published on : 14th September 2019 07:30 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரி முதலியார்பேட்டை அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி வேல்ராம்பட்டு நடுத்தெருவைச் சேர்ந்த அந்தோணிசாமி - மீனா தம்பதியின் மகன் பிரசாந்த் (18). வில்லியனூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    பிரசாந்த்துக்கும், அவருடன் படிக்கும் கல்லூரி நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பிரசாந்த்துடன் அவரது நண்பர்கள் பேசவில்லையாம். இதன் காரணமாக, மனவருத்தத்தில் இருந்து வந்த பிரசாந்த், கடந்த 10 ஆம் தேதி இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    மறுநாள் காலை வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை, பெற்றோர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து தீவிரசிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரசாந்த் வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்தார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    kattana sevai