Enable Javscript for better performance
கைக்கடிகார கடையில் ரூ. 10 லட்சம் மதிப்பு கடிகாரங்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கைக்கடிகார கடையில் ரூ. 10 லட்சம் மதிப்பு கடிகாரங்கள் திருட்டு

    By DIN  |   Published on : 14th September 2019 07:30 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரியில் உள்ள கைக்கடிகாரக் கடை ஒன்றில், ரூ. 10 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த கடிகாரங்களை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
    புதுச்சேரி காந்தி வீதியில் பிரபல தனியார் கைக்கடிகாரக் கடை உள்ளது. வியாழக்கிழமை இரவு விற்பனையை முடித்து ஊழியர்கள் கடையை மூடிவிட்டுச் சென்றனர். கதவுக்கு வெளியில் படுத்திருந்த காவலாளி, இரவு மழையால் கடையின் அருகே சென்று உறங்கியுள்ளார். இதை சாதகமாகப் பயன்படுத்தி, கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கடைக்குள் இருந்த 30-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை திருடிவிட்டு, கதவை மீண்டும் மூடிவிட்டு தப்பியோடிவிட்டதாகத் தெரிகிறது.
    வெள்ளிக்கிழமை காலை ஊழியர்கள் வந்து கதவைத் திறக்க முற்பட்ட போதுதான், கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்த போது, சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
    இதையடுத்து, கடையின் நிர்வாக அதிகாரி பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீஸார் வழக்குப் பதிந்து, கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    kattana sevai