Enable Javscript for better performance
தவளக்குப்பத்தில் செப். 29-இல் இலவச வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தவளக்குப்பத்தில் செப். 29-இல் இலவச வேலைவாய்ப்பு முகாம்

    By DIN  |   Published on : 14th September 2019 07:32 AM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரி தவளக்குப்பத்தில் வருகிற 29 ஆம் தேதி வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் சார்பில் இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    இதுகுறித்து வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
    ராம் சில்க்ஸ் நிறுவனத்துடன் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் இணைந்து தவளக்குப்பத்தில் உள்ள சுபமங்களா மஹாலில் வருகிற 29 ஆம் தேதி இலவச வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. 
    இந்த முகாமில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் கணினி, தொழில்நுட்பம், கணினி அறிவியல் பொறியியல் நிறுவனங்கள், வர்த்தகம், விற்பனை, சந்தைப்படுத்துதல், தயாரிப்பு, உற்பத்தி, ஹோட்டல் மேலாண்மை, சில்லறை வணிகம், வங்கிப் பிரிவு, சிவில் மற்றும் கட்டுமானம், விநியோகம் தொடர்பான 60 நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளன.
    இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு, கலை மற்றும் அறிவியல், பொறியியல், ஹோட்டல் மேலாண்மை, நர்சிங், வாழ்க்கை அறிவியல் படித்த மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க விரும்புவோர் h‌t‌t‌p://‌v‌v‌v‌s‌i.‌p‌o‌s​b‌e​a‌n.​c‌o‌m என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களை 97514 43139 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு அறியலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    kattana sevai