காமராஜர் நகர் இடைத் தேர்தல்: இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத் தேர்தலில் போட்டியிட திங்கள்கிழமை (செப். 23) முதல் விருப்ப மனு அளிக்கலாம் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத் தேர்தலில் போட்டியிட திங்கள்கிழமை (செப். 23) முதல் விருப்ப மனு அளிக்கலாம் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
புதுச்சேரி காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபர் 21- ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் திங்கள்கிழமை (செப். 23) முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்ய ஏதுவாக, திங்கள்கிழமை (செப். 23) முதல் காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம்.
விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு ஆண்களுக்கு ரூ. 10 ஆயிரமும், பெண்களுக்கு 
ரூ. 5 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  விருப்ப மனுவுக்கான விண்ணப்பம் தலைமை அலுவலகத்தில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவைப் பெறுவதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர்கள் வினாயகமூர்த்தி, தேவதாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ்  உறுப்பினர்கள் கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்டணத்தைச் செலுத்தி, விருப்ப மனுவைப் பெற்று,  பூர்த்தி செய்து அளிக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com