தியாகி ராமானுஜத்துக்கு சிலை வைக்கக் கோரி முதல்வரிடம் மனு

மறைந்த தியாகி ராமானுஜத்துக்கு சிலை வைக்கக் கோரி, தியாகி ராமானுஜம் நூற்றாண்டு விழாப் பேரவையினர் முதல்வரிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனர்.

மறைந்த தியாகி ராமானுஜத்துக்கு சிலை வைக்கக் கோரி, தியாகி ராமானுஜம் நூற்றாண்டு விழாப் பேரவையினர் முதல்வரிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில், பேரவையின் நிர்வாகிகள் மற்றும் தியாகி ராமானுஜத்தின் குடும்பத்தினர் புதுவை முதல்வர் வே.நாராயணசாமியிடம் அளித்த மனு விவரம்:
புதுச்சேரி விடுதலைப் போராட்டத்துக்காக மக்கள் தலைவர் வ.சுப்பையாவுடன் சேர்ந்து போராடியவர் தியாகி ராமானுஜம். மத்தியில் மொரார்ஜி தேசாய் பிரதமராகவும், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராகவும் இருந்த போது, புதுவை மாநிலப் பகுதிகளை அண்டை மாநிலங்களுடன் இணைக்க எடுக்கப்பட்ட முயற்சிக்கு எதிராக அதற்கென ஒரு போராட்டக் குழுவை அமைத்து, அதன் செயலராகப் பொறுப்பேற்று, இணைப்பை  எதிர்த்துப் போராடி சிறை சென்றவர் ராமானுஜம்.
மத்திய அரசின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தாமிரப் பட்டய விருதைப் பெற்றவர். மூடப்பட்ட  ஏஎப்டி ஆலையைத் திறக்க வேண்டி,  நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்து, போராடி அதில் வெற்றி கண்டவர். 
இவ்வாறு பல்வேறு சாதனைகளைப் புரிந்த புதுச்சேரி மண்ணின் மைந்தர் மறைந்த தியாகி ராமானுஜத்துக்கு புதுவை அரசு நன்றி தெரிவிக்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
புதுச்சேரியின் மையப் பகுதியில் அவருடைய முழு உருவச் சிலையை நிறுவி மரியாதை செலுத்துவதுடன், அரியாங்குப்பம் பாலத்துக்கு தியாகி ராமானுஜத்தின் பெயரைச் சூட்ட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பேரவைத் தலைவர் சேகர், துணைத் தலைவர் ஆனந்தன், செயலர் பன்னீர்தாஸ், துணைச் செயலர் ரமேஷ், பொருளாளர் வெற்றிச்செல்வன் மற்றும் தியாகி ராமானுஜத்தின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com