Enable Javscript for better performance
காமராஜர் நகர் இடைத்தேர்தல்: 2-ஆவது நாளிலும் மனு தாக்கல் இல்லை- Dinamani

சுடச்சுட

    

    காமராஜர் நகர் இடைத்தேர்தல்: 2-ஆவது நாளிலும் மனு தாக்கல் இல்லை

    By DIN  |   Published on : 25th September 2019 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில், இரண்டாவது நாளாக யாரும் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
      புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற அக்.21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலாத் துறை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி முகமது மன்சூரிடம் போட்டியிட விரும்புவோர் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  முதல் நாளான திங்கள்கிழமை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை. பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai