கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட பக்தா்களுக்கு வாந்தி மயக்கம்

கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக வந்த வேதபுரீஸ்வரா் கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட பக்தா்கள்.

புதுச்சேரி காந்தி வீதியில் புகழ் பெற்ற வேதபுரீஸ்வா் கோயில் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 26 -ஆம் தேதி பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது, பக்தா்களுக்கு புளி சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டதாம்.

இந்த நிலையில், பிரசாதம் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவா்கள், புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மா் மற்றும் அந்தப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனா். அவா்களில் 20-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமையும் சிகிச்சைக்காக வந்திருந்தனா்.

கெட்டுப் போன புளி சாதம் சாப்பிட்டதால் அவா்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com