மைசூர் தசரா விழாவில் தமிழ்ச் சங்கத் தலைவர் பங்கேற்பு

மைசூரில் ஞாயிற்றுக்கிழமை (செப். 29) தொடங்கும் தசரா விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து கலந்து கொள்கிறார்.


மைசூரில் ஞாயிற்றுக்கிழமை (செப். 29) தொடங்கும் தசரா விழாவில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து கலந்து கொள்கிறார்.
உலக புகழ் பெற்ற தசரா விழா ஞாயிற்றுக்கிழமை (செப். 29)  தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. இதற்காக கர்நாடக அரசும், மைசூர் மாநகராட்சியும் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளன.
விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் கி.பி. 1610 -ஆம் ஆண்டியிலிருந்து தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 1972-ஆம் ஆண்டு முதல் கர்நாடக அரசு சார்பில், தசரா விழா மாநில விழாவாக பிரம்மாண்டமாக கொண்டப்பட்டு வருகிறது. நிகழாண்டு 409-ஆவது ஆண்டு தசரா விழா ஞாயிற்றுக்கிழமை (செப். 29)  தொடங்கி 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா,  கர்நாடக அமைச்சர் சோமண்ணா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதுவரை இல்லாத வகையில், கர்நாடக அரசு தமிழர்களை பங்கேற்று நடத்த வருமாறு அழைப்பு விடுத்தது. கர்நாடக அரசும், மைசூர் தமிழ்ச் சங்கமும் தசரா விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்துவுக்கு அழைப்பு விடுத்திருந்து.
இதேயேற்று புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, தசரா  தொடக்க விழாவிலும், மறுநாள் தமிழர்களின் பராம்பரிய உணவு திருவிழாவிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். விழா ஏற்பாடுகளை மைசூர் தமிழ்ச் சங்கத் தலைவர் கு.புகழேந்தி மற்றும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com