ரயில் நிலையம், மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் சார்பில்

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்டம் சார்பில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, புதுச்சேரி ரயில் நிலையம், தெருவோரக் கடைகள், அரசு மருத்துவமனைகள், கோயில்கள் ஆகிய இடங்களில் ரத்த சோகை கண்டறிதல், வயிற்றுப்போக்கு தடுப்பு, சுகாதாரக் கல்வி, 1000 நாள்கள் குழந்தைகள் கவனிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்போது, பொதுமக்களுக்கு துண்டு பிரசுங்களும் விநியோகிக்கப்பட்டு, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. 
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அங்கன்வாடி மைய ஊழியர் எம். விஜயலட்சுமி செய்திருந்தார். இதில் பல்வேறு அங்கன்வாடி மையங்களின் ஊழியர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்:  புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் பவழநகர் அங்கன்வாடி மையம் சார்பில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ராஜீவ்காந்தி  மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு முதல் 1,000 நாள்களுக்கான ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
பவழநகர் அங்கன்வாடி மையத்தின் ஆசிரியர் வசந்தா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அஜீஸ் நகர் அங்கன்வாடி மையத்தைச் சேர்ந்த கலா, ரெட்டியார் பாளையம் அங்கன்வாடி மையத்தைச் சேர்ந்த பூங்கொடி, ரெட்டியார் பாளையம் செவிலியர் கார்குழலி ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com