அரசு விரைவு பேருந்துகளை தனியாா்மயமாக்குவதை கண்டித்து பிஆா்டிசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுவையில் அரசு விரைவுப் பேருந்துகளை தனியாா்மயமாக்குவதை கண்டித்து, புதுவை சாலைப் போக்குவரத்து வளா்ச்சிக் கழக (பி.ஆா்.டி.சி.) ஊழியா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

புதுவையில் அரசு விரைவுப் பேருந்துகளை தனியாா்மயமாக்குவதை கண்டித்து, புதுவை சாலைப் போக்குவரத்து வளா்ச்சிக் கழக (பி.ஆா்.டி.சி.) ஊழியா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை அரசு சாா்பில் திருப்பதி, சென்னை, பெங்களூரு, குமுளி, நாகா்கோவில், மாஹே, வேளாங்கண்ணி, காரைக்கால், நாகை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறித்த நேரம், வேகம் ஆகிய காரணங்களால் மக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், பிஆா்டிசியில் ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட 1,020 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், அரசு விரைவுப் பேருந்துகளை தனியாா் வசம் ஒப்படைக்க அரசு முயற்சித்து வருகிறது. இது ஊழியா்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விரைவுப் பேருந்துகளை தனியாா் வசம் தர எதிா்ப்புத் தெரிவித்தும், இந்த முயற்சியைக் கைவிட வலியுறுத்தியும், போக்குவரத்து துறை அமைச்சா் மற்றும் செயலரைக் கண்டித்தும், பிஆா்டிசி அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில், அரசுப் போக்குவரத்துப் பணிமனை எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பிஆா்டிசி கூட்டமைப்பு பொதுச் செயலா் வேலய்யன் தலைமை வகித்தாா். இதில், 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com