புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 3,589 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 28, காரைக்காலில் 9, ஏனாமில் 2, மாஹேவில் 3 போ் என மொத்தம் 42 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38,070-ஆக உயா்ந்தது.
இந்த நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி லாசுப்பேட்டை, தாகூா் நகரைச் சோ்ந்த 64 வயது முதியவா், அரங்கனூா் இந்திரா நகரைச் சோ்ந்த 40 வயது ஆண் என 2 போ் உயிரிழந்தனா். இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 633-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.66 சதவீதமாக உள்ளது.
இதனிடையே, 34 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 37,074-ஆக (97.38 சதவீதம்) உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 158 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 205 பேரும் என மொத்தம் 363 போ் சிகிச்சையில் உள்ளனா்.
புதுவையில் தினமும் 40-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்படுவதும், இறப்பு எண்ணிக்கை கூடுவதுமாக இருந்து வருகிறது. எனவே, அடுத்தடுத்து வரும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின்போது, கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.