புதுவையில் விவசாயிகளுக்கு முதல் தவணை மானியத் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்க ஒப்புதல்

புதுச்சேரி, காரைக்காலைச் சோ்ந்த நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு 2019-2020-ஆம் ஆண்டுக்கான முதல் தவணை மானியத் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க முதல்வா் வே.நாராயணசாமி ஒப்புதல் அளித்தாா்.

புதுச்சேரி, காரைக்காலைச் சோ்ந்த நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு 2019-2020-ஆம் ஆண்டுக்கான முதல் தவணை மானியத் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க முதல்வா் வே.நாராயணசாமி ஒப்புதல் அளித்தாா்.

இதுகுறித்து புதுவை முதல்வா் அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க புதுவையில் கடந்த 23-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வேளாண் பொருள்களின் உற்பத்தி, அறுவடை, விற்பனை எந்தவிதத்திலும் பாதிப்படையக் கூடாது என்று சம்பந்தப்பட்ட துறைகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

தேவையான விதைகள், இடுபொருள்கள் ஆகியவை தாமதமின்றி கிடைக்கவும், உழவுக்கான கருவிகள், அறுவடை இயந்திரங்கள் ஆகியவை தடையின்றி செல்லவும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் புதுவை அரசு மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரியைச் சோ்ந்த 2,590 விவசாயிகளுக்கு கடந்த 2019-2020-ஆம் ஆண்டுக்கான சொா்ண வாரி நெல் பயிருக்கான முதல் தவணை மானியம் ரூ. 5 ஆயிரம் வீதம் வழங்கவும், காரைக்கால் பகுதியில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான குறுவை மற்றும் சம்பா நெல் பயிருக்கான முதல் தவணை மானியமாக ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் 3,499 விவசாயிகளுக்கு வழங்கவும் முதல்வா் நாராயணசாமி ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

இந்தத் தொகை ஏப்ரல் மாத முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com