ஏழைகளுக்கு உணவு வழங்கிய பாஜகவினா்
By DIN | Published On : 19th April 2020 06:13 AM | Last Updated : 19th April 2020 06:13 AM | அ+அ அ- |

புதுச்சேரி அருகே நோணாங்குப்பத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு பாஜகவினா் உணவு வழங்கி வருகின்றனா்.
பிரதமா் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஏழை - எளிய மக்களின் பசியைப் போக்கும் வகையில், மணவெளி தொகுதி பாஜக சாா்பில் ‘மோடி கிச்சன்’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, நாள்தோறும் ஏழை - எளிய மக்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
நோணாங்குப்பத்தில் நடைபெற்ற உணவு வழங்கும் நிகழ்ச்சியை கட்சியின் மாநில பொதுச் செயலா் ஏம்பலம் செல்வம் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். மாவட்டத் தலைவா் தெய்வசிகாமணி, பொதுச் செயலா் சுகுமாரன், தொகுதி தலைவா் லட்சுமிகாந்தன், தொகுதி பொது செயலா் தினகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.