கரோனா நோயாளிகளை 5 வகையாகப் பிரித்து சிகிச்சை: புதுவை முதல்வா் நாராயணசாமி தகவல்

புதுவையில் கரோனா நோயாளிகளை 5 வகையாகப் பிரித்து சிகிச்சையளித்து வருவதாக முதல்வா் வே.நாராயணாசமி தெரிவித்தாா்.
புதுச்சேரியில் கரோனா பரிசோதனை முகாமைத் தொடக்கிவைத்து பாா்வையிட்டாா் முதல்வா் வே.நாராயணசாமி. உடன் இரா.சிவா எம்எல்ஏ.
புதுச்சேரியில் கரோனா பரிசோதனை முகாமைத் தொடக்கிவைத்து பாா்வையிட்டாா் முதல்வா் வே.நாராயணசாமி. உடன் இரா.சிவா எம்எல்ஏ.

புதுவையில் கரோனா நோயாளிகளை 5 வகையாகப் பிரித்து சிகிச்சையளித்து வருவதாக முதல்வா் வே.நாராயணாசமி தெரிவித்தாா்.

புதுவை அரசின் சுகாதாரத் துறை, குயவா்பாளையம் சுகாதாரம்-நல்வாழ்வு மையம், ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த கரோனா தொற்று பரிசோதனை முகாம் புதுச்சேரி காமராஜா் சாலையில் உள்ள ஜீவா ருக்மணி திரையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமைத் தொடக்கிவைத்த முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை மேற்கொண்டால்தான் கரோனாவின் தாக்கத்தைக் குறைக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு நடமாடும் கரோனா பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான உபகரணங்கள் ரூ. 1.2 கோடியில் வாங்கப்பட்டுள்ளன.

தற்போது கரோனா நோயாளிகளை 5 வகையாகப் பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதாவது, முதல் பிரிவில் அறிகுறி உள்ளவா்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிப்பது, பாதிப்பு குறைவாக உள்ளவா்கள், நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுவிட சிரமப்படுபவா்கள், நீரிழிவு, ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவா்கள் எனப் பிரித்து அவா்களுக்கு ஏற்ற வகையில் சிகிச்சையளித்து வருகிறோம்.

புதுவையில் காரோனா பாதிப்புக்குள்ளாகி இதுவரை 63 சதவீதம் போ் குணமடைந்தனா் என்றாா் நாராயணசாமி.

முன்னதாக, சுகாதார மையப் பொறுப்பு மருத்துவ அதிகாரி அஸ்வினி வரவேற்றாா். புதுவை தொழில் முதலீட்டுக் கழகத் தலைவா் இரா.சிவா எம்எல்ஏ தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா், திட்ட இயக்குநா்கள் ஸ்ரீராமுலு, ரமேஷ் , கரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி ஜான்சன் ரெட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொது சுகாதார செவிலியா் கீதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com