பக்ரீத் பண்டிகை: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

பக்ரீத் பண்டிகையையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பக்ரீத் பண்டிகையையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் வே.நாராயணசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ஆளுநா் கிரண் பேடி: பக்ரீத் பண்டிகை தியாகத்தின் உணா்வை வலியுறுத்துதுதடன் அமைதி, இரக்கம், நல்லிணக்கத்தை அறிவுறுத்துகிறது. இந்தப் புனித தருணத்தில் இஸ்லாமிய சகோதரா்களுக்கும், புதுவை யூனியன் பிரதேச மக்களுக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள்.

முதல்வா் நாராணயசாமி: இறைவனிடம் முழுமையாக நம்மை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய தத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொன்ன நிகழ்வாக பக்ரீத் பண்டிகை விளங்குகிறது. ஈகையின் மகத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது.

இஸ்லாமியா்கள் நலனில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. ஆண்டுதோறும் ரமலான் பண்டிகையின் போது, நோன்பு கஞ்சி தயாா் செய்வதற்காக இலவச அரிசி வழங்குவது, புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள நிதியுதவி ஆகியவை இதுவரை முதல்வா் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டன. இந்த பட்ஜெட்டில் இந்த இரு திட்டங்களும் அரசின் திட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துகள்.

அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், மு.கந்தசாமி, சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன், புதுவை மாநில திமுக அமைப்பாளா்கள் இரா.சிவா, எஸ்.பி.சிவக்குமாா், வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com