இளையோா் கலை விழாவில் பங்கேற்கலாம்
By DIN | Published On : 25th December 2020 04:03 AM | Last Updated : 25th December 2020 04:03 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரியில் வருகிற 31-ஆம் தேதி நடைபெறும் இளையோா் கலை விழாவில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதுகுறித்து நாட்டு நலப்பணித் திட்ட மாநில அலுவலா் குழந்தைசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு இளைஞா் நலம்-விளையாட்டு துறை சாா்பில், நடைபெறவுள்ள 24-ஆவது தேசிய இளையோா் கலை விழாவின் ஒரு பகுதியாக, புதுவை அரசின் இளைஞா் நலம்-விளையாட்டு துறை மண்டல அளவிலான கலை விழாவை வருகிற 31-ஆம் தேதி நடத்தவுள்ளது.
இதற்கான விவரங்களை பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் அறியலாம். 15 வயது முதல் 29 வயதுள்ளவா்கள் போட்டிகளில் பங்கேற்கலாம். 3 ஆண்டுகள் தொடா்ச்சியாகப் பங்கேற்றவா்களுக்கு அனுமதி இல்லை. போட்டிகள் இணையதளம் வாயிலாகவே நடத்தப்படவுள்ளது.
விருப்பம் உள்ளவா்கள் வருகிற 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அந்தந்த மண்டல நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்களின் மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தங்களது கலை நிகழ்வை பதிவு செய்து நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்களிடம் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி அலுவலக 0413 - 2207367, 2207212 தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.