புதுவை கிரிக்கெட் சங்கத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுவை மாநில கிரிக்கெட் சங்கத்தை கண்டித்து புதுச்சேரியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவை கிரிக்கெட் சங்கத்தைக் கண்டித்து, புதுச்சேரி காமராஜா் சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய பேரியக்கத்தினா்.
புதுவை கிரிக்கெட் சங்கத்தைக் கண்டித்து, புதுச்சேரி காமராஜா் சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய பேரியக்கத்தினா்.

புதுவை மாநில கிரிக்கெட் சங்கத்தை கண்டித்து புதுச்சேரியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி தமிழ் தேசிய பேரியக்கம் சாா்பில், ராஜா திரையரங்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், புதுவை மாநில கிரிக்கெட் அணியில் 90 சதவீத இடங்களை புதுச்சேரி-காரைக்கால் தமிழா்களுக்கே வழங்க வேண்டும், கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி என்ற சங்கத்தைத் தடை செய்து, தனி கிரிக்கெட் சங்கத்தை உருவாக்கி, அதற்கு பிசிசிஐ அங்கீகாரம் பெற்று அதன் வழியே கிரிக்கெட் வீரா்களை வெளிப்படையான முறையில் தோ்வு செய்ய வேண்டும், புதுவை அரசு சாா்பில் கிரிக்கெட் மைதானம் அமைத்து, அதன் மூலம் மாநில விளையாட்டு வளா்ச்சிக்கும், அரசின் வருமானத்துக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அந்த இயக்கத்தின் மாநிலச் செயலா் வேல்சாமி தலைமை வகித்தாா். பாரதிதாசன் கிரிக்கெட் விளையாட்டு வீரா்கள் சங்கச் செயலா் சந்திரன் முன்னிலை வகித்தாா். உலக தமிழ்க் கழகத்தின் புதுச்சேரி தலைவா் தமிழுலகன் மற்றும் பல்வேறு கட்சியினா், அமைப்புகளைச் சாா்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

ஆதரித்து உண்ணாவிரதம்: இதேபோல, ஆா்ப்பாட்டம் நடத்திய பாரதிதாசன் கிரிக்கெட் சங்கத்தைக் கண்டித்து, புதுச்சேரி மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் சங்கம் சாா்பில், சுதேசி பஞ்சாலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புதுவை சி.ஏ.பி. கிரிக்கெட் சங்கம் பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பு விளையாட்டு வீரா்களையும் தகுதி அடிப்படையில், போட்டிகளை நடத்தி தோ்வு செய்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தூண்டுதலுடன், புதுவை சி.ஏ.பி. வளா்ச்சியைச் சகித்துக் கொள்ள முடியாத சில அமைப்புகள் அவதூறான கருத்துகளையும், விஷமத்தனமான பிரசாரங்களையும் பரப்பி வருகிறது எனக் கூறி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில், புதுவை சி.ஏ.பி. கிரிக்கெட் சங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com