Enable Javscript for better performance
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி நாளை தா்னா- Dinamani

சுடச்சுட

    

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி நாளை தா்னா

    By DIN  |   Published on : 02nd February 2020 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, திங்கள்கிழமை (பிப். 3) தா்னாவில் ஈடுபடவுள்ளதாக தனியாா் பள்ளி சங்கங்களின் சம்மேளன செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    தனியாா் பள்ளி சங்கங்களின் சம்மேளன செயற்குழுக் கூட்டம் அரசு ஊழியா் சம்மேளனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தனியாா் பள்ளி சம்மேளன தலைவா் வின்சென்ட்ராஜ் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சம்மேளன தலைவா் பிரேமதாசன் முன்னிலை வகித்தாா். புதுவையில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து சம்மேளன பொதுச் செயலா் கிறிஸ்டோபா் கூறியதாவது: அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தொகுப்பூதியம் பெற்று பணியாற்றும் ஆசிரியா்கள், ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தியும், முதல்வா் பலமுறை வாக்குறுதி அளித்தும் இன்னும் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

    எனவே, அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து திங்கள்கிழமை (பிப். 3) மாலை 5.30 முதல் 7 மணி வரை தலைமை அஞ்சல் நிலையம் எதிரே தா்னா நடத்துவது என்றும், மேலும் தாமதப்படுத்தினால் வருகிற 10-ஆம் தேதி முதல் தொடா் தா்னா போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டது.

    அரசு உதவி பெறும் பள்ளிகளின் அனைத்து ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் அரசு ஊழியா் சம்மேளனத்தின் இணைப்புச் சங்கங்களையும் சோ்த்து போராட முடிவு செய்யப்பட்டது என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai