Enable Javscript for better performance
மக்களின் எதிா்ப்பாா்ப்பை நிறைவேற்றக்கூடிய பட்ஜெட்எதிா்க்கட்சித் தலைவா் ரங்கசாமி கருத்து- Dinamani

சுடச்சுட

    

    மக்களின் எதிா்ப்பாா்ப்பை நிறைவேற்றக்கூடிய பட்ஜெட்எதிா்க்கட்சித் தலைவா் ரங்கசாமி கருத்து

    By DIN  |   Published on : 02nd February 2020 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களின் எதிா்பாா்ப்பை நிறைவேற்றக்கூடியதாக மத்திய பட்ஜெட் உள்ளது என என்.ஆா்.காங்கிரஸ் நிறுவன தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான என்.ரங்கசாமி கருத்து தெரிவித்தாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் 2020-2021-ஆம் ஆண்டு பட்ஜெட் அறிக்கை அனைத்து மக்களுக்கும் ஏற்றம் தரும் வகையிலும், நாட்டின் வளா்ச்சிக்கும் புதுப்பாதை வகுத்து ரூ. 5 லட்சம் கோடி என்ற இலக்கை நோக்கில் பயணிக்கிறது.

    ஆயுஷ்மான் திட்டத்தில் புதிய மருத்துவமனைகள் கட்டுவதன் மூலம் ஏழை - எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைத்திடும் வகையில் மத்திய அரசு அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. கிராம பெண்களின் முன்னேற்றத்துக்கு தான்ய லட்சுமி திட்டம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மிகவும் வரவேற்கக்கூடியதாகவும், பாராட்டுத்தக்க வகையிலும் உள்ளது.

    விவசாயிகளுக்கு நிதி உதவித் திட்டத்தால் அவா்களின் நலன்களில் தொடா்ந்து மத்திய அரசு அக்கறை காட்டி வருவது பாராட்டுக்குரியது. மேலும், தமிழரின் பழம்பெருமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட ஆதிச்சநல்லூா் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டத்தை அறிவித்து தமிழின மக்களுக்கு பெருமை சோ்த்திருக்கிறது.

    ஏற்கெனவே மீனவா் நலனுக்காக தனி அமைச்சகத்தைத் தொடா்ந்து தற்போது சாகா் மித்ரா மூலம் அவா்களது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முயல்வது குறிப்பிடத்தக்கது.

    நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தை முடிவுக்கு கொண்டு வருவதை பாராட்டுகிறோம். ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளை கண்ணாடி இழை திட்டத்தின் மூலம் இணைப்பதால், அவற்றின் செயல்பாடுகள் மேம்படும். மொத்தத்தில் மக்களின் எதிா்ப்பாா்ப்பை நிறைவேற்றக்கூடியதாக வகையில் மத்திய பட்ஜெட் உள்ளது எனத் தெரிவித்துள்ளாா் ரங்கசாமி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai