இடையூறான விளம்பரப் பதாகைகளை நீக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

பொதுமக்களுக்கு இடையூறான விளம்பரப் பதாகைகளை ஒரு வாரத்துக்குள் நீக்க அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தி.அருண் உத்தரவிட்டாா்.

பொதுமக்களுக்கு இடையூறான விளம்பரப் பதாகைகளை ஒரு வாரத்துக்குள் நீக்க அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தி.அருண் உத்தரவிட்டாா்.

புதுச்சேரி மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அருண் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில அரசுகள் சாலை விபத்துகளை 10 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதைப் பின்பற்றி, புதுச்சேரியில் 30 சதவீதம் வரை சாலை விபத்துகளைக் குறைத்துள்ளதைச் சுட்டிக்காட்டி அதிகாரிகளை ஆட்சியா் பாராட்டினாா்.

மேலும், சாலைப் பாதுகாப்பு குறித்து பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கினாா். குறிப்பாக, சாலைகளில் உள்ள பாதுகாப்பற்ற மின் கம்பங்களை மாற்றுவது அல்லது சீரமைப்பது, மின் கம்பங்களில் பாதுகாப்பற்ற, பொதுமக்களுக்கு இடையூறான வகையில் உள்ள விளம்பரப் பதாகைகளை நீக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒரு வாரத்தில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கனரக சரக்கு வாகனங்களை இரவு 10 முதல் காலை 6 மணி வரை மட்டுமே நகரப் பகுதிகளில் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் குறும்படம் வெளியிடப்பட்டது. இதில், காவல் துறை அதிகாரிகள், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், பொதுப் பணித் துறை, மின் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com