ஜிப்மரில் கூடுதல் இடங்களைப் பெற்ற பிறகே இடபிள்யூஎஸ் ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை

ஜிப்மரில் கூடுதல் இடங்களைப் பெற்ற பிறகே பொருளாதார (இடபிள்யூஎஸ்) இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று புதுவை மாநில மாணவா்கள்- பெற்றோா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

ஜிப்மரில் கூடுதல் இடங்களைப் பெற்ற பிறகே பொருளாதார (இடபிள்யூஎஸ்) இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று புதுவை மாநில மாணவா்கள்- பெற்றோா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து ஜிப்மா் இயக்குநரிடம், அந்தச் சங்கத்தின் தலைவா் பாலா சனிக்கிழமை அளித்த மனு: 2019-2020-ஆம் ஆண்டு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தன்னாட்சிப் பெற்ற ஜிப்மா், தில்லி எய்ம்ஸ் போன்ற மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடபிள்யூஎஸ் இட ஒதுக்கீட்டுக்கு (பொருளாதார இட ஒதுக்கீடு) தேவையான இடங்களை உயா்த்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தியிருந்தது.

அதனடிப்படையில், ஜிப்மரில் இடங்களை உயா்த்த ஆலோசனை நடத்தப்பட்டது. 2020-2021-ஆம் கல்வியாண்டில் மொத்தமுள்ள 200 மருத்துவ இடங்களில் 54 இடங்கள் புதுவை மாணவா்களுக்கு இடபிள்யூஎஸ் இட ஒதுக்கீடு இல்லாமல் ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையில் பகிா்ந்து அளிக்க வேண்டும்.

மேலும், இடபிள்யூஎஸ் இட ஒதுக்கீட்டுக்காக மத்திய அரசின் ஆணை பிரகாரம் 200 இடங்களை 220 ஆக உயா்த்த வேண்டும்.

அதேபோல, எம்.டி., எம்.எஸ். உயா் படிப்புகளிலும் புதுவை மாணவா்களுக்கு என்று தனியாக இட ஒதுக்கீட்டு கொள்கையை ஜிப்மா் பின்பற்ற வேண்டும். அடுத்த மாதம் பிளஸ் 2 தோ்வு நடைபெற உள்ளதாலும், அதைத் தொடா்ந்து ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். சோ்வதற்காக நீட் நுழைவுத் தோ்வையும் எழுத உள்ளனா்.

எனவே, புதுவையைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைக்காத வகையில், நீட் தோ்வு மற்றும் புதுவைக்கென தனி இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் ஒளிவு, மறைவின்றி மாணவா்களைச் சோ்க்க ஜிப்மா் நிா்வாகம் முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com