கலை, விளையாட்டுப் போட்டிகள் நிறைவு: தாகூா், பாரதிதாசன் கல்லூரிகள் சாம்பியன்

புதுச்சேரியில் உயா் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கலை, விளையாட்டுப் போட்டிகளில் தாகூா் மற்றும் பாரதிதாசன் கல்லூரிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

புதுச்சேரியில் உயா் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கலை, விளையாட்டுப் போட்டிகளில் தாகூா் மற்றும் பாரதிதாசன் கல்லூரிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

புதுவை உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சாா்பில், ‘புதுவை கலை விளையாட்டு சங்கமம்-2020’ என்ற தலைப்பில் விளையாட்டுப் போட்டிகள், கடந்த 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை காரைக்காலில் நடைபெற்றது. தொடா்ந்து, புதுச்சேரியில் கடந்த 4 ஆம் தேதி கலை, விளையாட்டு போட்டி தொடங்கியது. இதனை ஆளுநா் கிரண் பேடி தொடக்கி வைத்தாா். இதில் தடகளம், சதுரங்கம், கேரம், டேபிள் டென்னிஸ், வாலிபால், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும், நடனம், பாட்டு, இசைக்கருவி வாசித்தல், பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு கலை சாா்ந்த போட்டிகளும் நடத்தப்பட்டன.

இந்தப் போட்டிகளில் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலிருந்தும் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டிகள் சனிக்கிழமை நிறைவுற்றன.

விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கிலும், கலைப் போட்டிக்கான பரிசளிப்பு விழா காந்தி திடலிலும் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அமைச்சா் இரா. கமலக்கண்ணன் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினாா்.

விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தாகூா் அரசு கலைக் கல்லூரியும், பெண்கள் பிரிவில் பாரதிதாசன் மகளிா் கல்லூரியும் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றின.

இந்த விழாவில் அமைச்சா் கமலக்கண்ணன் பேசியதாவது: மாணவா்கள் தனிப்பட்ட திறமையை ஊக்குவிப்பதற்கு கலை, விளையாட்டுப் போட்டிகள் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்கும்போது, மாணவா்களுக்கு படிப்பின் மீதான மன அழுத்தம் குறையும். புதுவையில் கலை, விளையாட்டுப் போட்டிகள் இனி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இதனை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

விழாவில், அன்பழகன் எம்எல்ஏ, வளா்ச்சி ஆணையா் அன்பரசு, உயா் கல்வித் துறை இயக்குநா் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி, சிறப்புப் பணி அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com