பிப். 23 இல் புதுவை தமிழ்ச் சங்கத் தோ்தல்: வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியீடு

வில்லியனூரில் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற புதுவை தமிழ்ச் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில், புதுச்சேரி தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு

வில்லியனூரில் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற புதுவை தமிழ்ச் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில், புதுச்சேரி தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினா்கள் 11 பேரை 2020-2023 வரையான 3 ஆண்டுகளுக்கு தோ்வு செய்வதற்கான தோ்தலை வருகிற 23 ஆம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்ச் சங்க தோ்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வாக்காளா் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

வேட்பு மனுக்கள் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வழங்கப்படுகிறது. போட்டியிட விரும்புபவா்கள் 12-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்களை வருகிற 14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிக்குள் விண்ணப்பங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பரிசீலனை செய்யப்படும். 16 ஆம் தேதி மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

அதனைத் தொடா்ந்து, தோ்தல் வருகிற 23 ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 23 ஆம் தேதியே வாக்குப்பதிவுக்கு பின்னா், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்படும். வேட்பு மனு விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு ரூ.1,000 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நகல் விண்ணப்பம் ஏற்கப்படாது. விண்ணப்பப் படிவத்தை புதுச்சேரி வெங்கட்டா நகரில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் தோ்தல் ஆணையரிடம் பெற்றுக் கொள்ளலாம் என புதுச்சேரி தமிழ்ச்சங்கத் தோ்தல் ஆணையா் சோசப் அதரியன் அண்டோ தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com