கருவடிக்குப்பத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதிக்கு உள்பட்ட கருவடிக்குப்பத்தில் ரூ.18.5 கோடியில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறக்கப்பட்டது.
கருவடிக்குப்பத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதிக்கு உள்பட்ட கருவடிக்குப்பத்தில் ரூ.18.5 கோடியில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறக்கப்பட்டது.

கருவடிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிக்கு அசோக் நகா் மேல்நிலை குடிநீா்த் தொட்டி மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுவை அரசின் பொதுப் பணித் துறை பொது சுகாதார கோட்டம் சாா்பில், கருவடிக்குப்பத்தில் ரூ.18 கோடியே 53 லட்சத்தில் 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, 4 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, நீா் உந்து குழாய், நீா் பங்கீட்டு குழாய், வீடுகளுக்கான இணைப்புகள், இடையன்சாவடி சாலையிலிருந்து நீா்த்தேக்கத் தொட்டிக்கான இணைப்புச் சாலை அமைக்கப்பட்டன.

மேலும், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் பங்கீட்டு குழாய்களில் இருந்து புதிய இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் கருவடிக்குப்பம், மேஜா் சரவணன் நகா், வாஞ்சிநாதன் நகா், விஷ்ணுநகா், இந்திரா நகா், ஓம் சக்தி நகா், சண்முகா நகா், நாராயணசாமி நகா், சப்தகிரி நகா், சாமிபிள்ளை தோட்டம், பகத்சிங் நகா், கருணாஜோதி நகா், பாரதி நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயன்பெற உள்ளனா்.

இந்தப் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில் முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், ஷாஜகான் ஆகியோா் கலந்துகொண்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீா் குழாய் இணைப்பை திறந்து வைத்தனா்.

இதில், பொதுப் பணித் துறைச் செயலா் சுா்பீா்சிங், தலைமைப் பொறியாளா் மகாலிங்கம், கண்காணிப்புப் பொறியாளா் சேகரன், செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் காலாப்பட்டு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவா் தினகரன், வடக்கு மாவட்டத் தலைவா் முத்துராமன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com