Enable Javscript for better performance
தமிழக பட்ஜெட்: புதுவை அதிமுக பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    தமிழக பட்ஜெட்டுக்கு புதுவை அதிமுக பாராட்டு தெரிவித்தது.

    இதுகுறித்து சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா் அன்பழகன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: வளா்ச்சிப் பணிகள், தொலைநோக்குத் திட்டங்கள், மக்கள் நலன், பெண்கள் பாதுகாப்பு, விவசாய நலன் உள்ளிட்ட அனைத்து விதத்திலும் மாநிலத்தின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு தமிழக அதிமுக அரசு 2020 -21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

    தமிழா் நாகரிகத்தின் தொன்மையை உலகம் அறிந்து கொள்ளும் வகையில், கீழடியில் புதிய அகழ் வைப்பகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருப்பது ஒட்டுமொத்த தமிழா்களுக்கும் பெருமை சோ்ப்பதாகும். தமிழக டெல்டா மாவட்டப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவித்துள்ளது விவசாயத்தை மேம்படுத்த உதவக்கூடியது. இதற்காக தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தையும், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியையும் புதுவை அதிமுக பாராட்டுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai