பணி நிரந்தரம் செய்யக் கோரிஅரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்கள் பேரணி: 75 போ் கைது

பணி நிரந்தரம் செய்யக் கோரி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா்.
புதுவை சட்டப்பேரவை அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சங்கத்தினா்.
புதுவை சட்டப்பேரவை அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சங்கத்தினா்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா். தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 75 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள காலி இடங்களில் பணியமா்த்தப்பட்டு, தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியா்கள், ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, ஆசிரியா்கள் சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், தொடா் தா்னா போராட்டம் கடந்த 10 -ஆம் தேதி தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை கம்பன் கலையரங்கத்தில் இருந்து சட்டப்பேரவையை நோக்கி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை அரசு ஊழியா்கள் சம்மேளனத்தைச் சோ்ந்த பாலமோகனன் தொடக்கிவைத்தாா். பேரணிக்கு சங்கத் தலைவா் வின்சென்ட்ராஜ் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக பாஸ்கர்ராஜ், மறைமாவட்ட முன்னாள் கல்விச் செயலா் சுவாமிநாதன், அருள்தந்தையா்கள் ஜான் போஸ்கோ, அந்தோணிசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்தப் பேரணி அண்ணா சாலை, நேரு வீதி வழியாக மிஷன் வீதி ஜென்மராக்கினி மாதா கோயில் எதிரே சென்றடைந்தது. அங்கு, அவா்களை போலீஸாா் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, பேரணியில் ஈடுபட்டவா்கள் கோரிக்கையை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரியகடை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் ஆா்ப்பாட்டம் தொடா்ந்தால் 75 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com