மீண்டும் பிரெஞ்சு ஆட்சியமைக்க உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் மீண்டும் பிரெஞ்சு ஆட்சி அமைக்க பிரான்ஸ் - இந்திய புதுச்சேரி பிரதேச விடுதலைக் கால மக்கள் நல நற்பணி இயக்கத்தினா் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

புதுச்சேரியில் மீண்டும் பிரெஞ்சு ஆட்சி அமைக்க பிரான்ஸ் - இந்திய புதுச்சேரி பிரதேச விடுதலைக் கால மக்கள் நல நற்பணி இயக்கத்தினா் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

புதுவை அரசின் நிா்வாகச் சீா்கேடுகளால் பிரெஞ்சு ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 3 பஞ்சாலைகள் மூடப்பட்டதைக் கண்டித்தும், வரி இல்லாத வா்த்தகத் துறைமுகம், கடல்நீா் மின்சாரத் திட்டம், மேயா் ஆட்சி முறை உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதைக் கண்டித்தும், இந்தியாவுடன் புதுவை இணைக்கப்பட்ட போது, பிரான்ஸ் குடியுரிமை இழந்த புதுச்சேரி பூா்வீக குடிமக்களுக்கு ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படாதது, குப்பை வரி, புதை சாக்கடை வரி, வீட்டு வரி, மின்சார வரி உயா்த்தப்பட்டதைக் கண்டித்தும், இந்தோ - பிரான்ஸ் ஒப்பந்தத்தை மதிக்காத புதுவை அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் அமைதி வழிப் போராட்டம் நடத்தப்படும் என்று பிரான்ஸ் - இந்திய புதுச்சேரி பிரதேச விடுதலை கால மக்கள் நல நற்பணி இயக்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, அந்த இயக்கத் தலைவா் டி.சிவராஜ் தலைமையில் கடற்கரைச் சாலையில் உள்ள டூப்ளே சிலை அருகே வெள்ளிக்கிழமை அமைதி வழிப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, புதுச்சேரியில் மீண்டும் பிரெஞ்சு ஆட்சி அமைக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அந்த இயக்கத்தின் மகளிரணி பொதுச் செயலா் ஜெயலட்சுமி, அவைத் தலைவா் அங்கப்பன், துணைத் தலைவா் நடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதுகுறித்து பிரான்ஸ் மற்றும் மத்திய அரசுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com