ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிராக மாநில அரசு போராட வலியுறுத்தல்

ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிராக மாநில அரசு போராட வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு எதிராக மாநில அரசு போராட வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுச்சேரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் டி.பி. ரவி வெளியிட்டுள்ள அறிக்கை:

விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கக் கூடிய ஹைட்ரோ காா்பன் திட்டத்தை எதிா்த்து புதுவை மாநிலத்தின் பாகூா், காரைக்கால் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தும், ஹைட்ரோ காா்பன் திட்டத்தை புதுவை மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம். இதனால், ஆட்சியை இழந்தாலும் கவலைப்படபோவதில்லை எனவும் புதுவை முதல்வா் வே. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதை விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.

இதேபோல, கடந்த காலங்களில் நீட் தோ்வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. 73 சதவீத இட ஒதுக்கீடு கோரியும், மாநில அந்தஸ்து கோரியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை அனைத்தையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதை மாநில காங்கிரஸ் அரசு கவனத்தில் கொண்டு, விவசாயிகளையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி போராட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகள் தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஓரணியில் திரள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com